Google+ | எழுத்தாளர் பாலகுமாரன் சிந்தனைகள் | Balakumaran Thoughts | Balakumaran Books

Pages

Thoughts and Quotes

Writer balakumaran thoughts and quotes

Labels

Sunday, April 20, 2014

மனிதனின் உள்ளம் - திருப்பூந்துருத்தி - பாலகுமாரன்



உணவை பகிர்ந்து கொள்கிறபோது  ஒரு மனிதனின் உள்ளம் மிகச் சுலபமாகத் தெரிந்து விடும்.

சில மனிதர்கள் பங்கு போடுவார்கள்.  தனக்குக் குறைச்சலாய் வைத்துக் கொண்டு பிறருக்குத் தர சிலர் முயற்சி செய்வார்கள்.

எல்லாத்தையும் சாப்பிடு என்று தட்டில் கொட்டுவார்கள்.  இதில் அனைத்துமே பொய் தான் இருக்கும். காரியம் செய்து விட்டு கழிவிரக்கத்தோடு இருக்கும்.

உடுப்பும் படிப்பும், உயர்வும் தாழ்வும், அன்பும் பண்பும் - எல்லாம் பிறரை உத்தேசித்து நடக்கும் விஷயம்.  

Tuesday, April 8, 2014

எனக்கு ஏன் இந்த கஷ்டம் ? - திருப்பூந்துருத்தி - பாலகுமாரன்



எனக்கு ஏன் இந்த கஷ்டம்  ?




எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததின் விளைவு. வீசிய பந்து, வீசிய விதமே திரும்பும். கொடுப்பதற்கும் வாங்கியதற்கும் உண்டான இடைவெளியால் எல்லாம் மறந்து போகிறது. எந்தப் பாவமும் செய்யாத எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் என்ற புலம்பல் வருகிறது.  

எதனால் இது ?

நல்லது நடக்கும் போது பொங்குகிற மகிழ்வு இல்லாதவர்க்கும், கெட்டது நடக்கும் போது துவண்டு  விழுந்து அழாதவர்க்கும் தான் இது எதனால் என்று யோசிக்கவே முடியும். 

Tuesday, April 1, 2014

How to Handle Angry Situation - Balakumaran

Saturday, March 29, 2014

மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி

மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி
Balakumaran


மனம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதிக்கு மனதில் பிளவு இல்லாது இருக்க வேண்டும். சரி-தவறு, நல்லது-கெட்டது என்கிற பேதங்கள் அற்று இருத்தல்அவசியம். பேதங்கள் இருக்க வெறுப்பாலும், விருப்பாலும் மனசு அலைக்கழிக்கிறது. படபடப்பாகிறது. படபடப்பு சக்தி விரயம்.

சிலதை வெறுக்கவும் சிலதை விரும்பவும் வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது. அவை சாதாரண மனிதர்களுக்கு எந்தச் சலனமும் இல்லாதிருத்தலே நலம்.

சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லாச் சலனங்களும் தவறு தான்.
சலனமற்றிருத்தலே உத்தமம்.

எண்ணங்கள் தான் மனித வாழ்க்கையைத் திட்டமிடுகின்றன. இது வேண்டும் அது வேண்டும், இப்பொழுது வேண்டும்-இப்பொழுது வேண்டாம் எற்று ஓயாது கட்டளைகள் ஏற்படுத்துகின்றன. இந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தும் விதமே வாழ்க்கை. 
 

Blogger news

Blogroll

About