Google+ Best Ways to Overcome Laziness - Balakumaran | எழுத்தாளர் பாலகுமாரன் சிந்தனைகள் | Balakumaran Thoughts | Balakumaran Books

Pages

Thoughts and Quotes

Writer balakumaran thoughts and quotes

Labels

Thursday, July 17, 2014

Best Ways to Overcome Laziness - Balakumaran

பாலகுமாரன் சிந்தனைகள் 


சோம்பலை எதிர்க்க வழி ? 

குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். உறக்கம் வரவழைக்காது. உறங்கும் போது உறக்கத்தை விரும்பாமல் எழுந்திருந்தும் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து கொண்டு தூங்குவது நலம்.

தூக்கம் கலைந்த பிறகு தூக்கம் தொடருவது பேராபத்து. கொஞ்சம் நேரம் தூங்குகிறேன் என்று சொல்வது கேவலம். மூளையிலிருந்து   உறக்கம் கலைந்த மறுநிமிடம் எழுந்து விட வேண்டும். பல் தேய்க்க நீர்பட்டவுடன் புத்தி சுறுசுறுப்பாகி விட வேண்டும். முதல் வேலையான பல் தேய்த்தலை முழு முனைப்போடு செய்ய வேண்டும்.

மூளையில் அலட்டல் மிச்சமிருக்கிறது. அந்த அலட்டல் கனவாக உங்களை அலைகழிக்கும். நல்ல தூக்கம் இல்லாது போகும். பேச்சுக் குறைந்தால் நன்கு தூங்கலாம். நல்ல தூக்கம் நாலு மணி நேரம் போதும்.

விடியலில் எழுந்திருத்தல், புத்திக்கு பலம் கொடுக்கும்.

பொழுது போக்கு என்பதே பிழைப்புக்கான வேலையாக இருந்தால் அதாவது வேலையே பொழுது போக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.

வெற்றி வேண்டுமெனில் சோம்பலை உதறுங்கள். 

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About